திருப்பதி வழிபாட்டின் பின்னர் நாடு திரும்பினார் ஜனாதிபதி

திருப்பதி வழிபாட்டின் பின்னர் நாடு திரும்பினார் ஜனாதிபதி

திருப்பதி வழிபாட்டின் பின்னர் நாடு திரும்பினார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 6:37 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திருப்பதி வெங்கடேஷ்வரர் தேவஸ்தானத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் இன்று  நாடு திரும்பியுள்ளார்.

திருமலை வெங்கடேஷ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்நதாகவும், ஆலய வளாகத்திலும் பாதுகாப்பு  பலப்பட்டிருந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை லங்கா சம சமாஜக் கட்சியின் சில உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸவிங்கு ஆதரவு வழங்குவதாக இவர்கள் இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்