திடீரென வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு

திடீரென வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு

திடீரென வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 2:29 pm

லிந்துலை பஸ் நிலையத்தில் சடலொன்று மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லிந்துலை டீ மலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சுகவீனம் காரணமாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து திடீரென வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, வைத்தியசாலைக்கு அருகிலுள்ள லிந்துலை – நாகசேனை பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்