திகாம்பரம், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு

திகாம்பரம், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு

திகாம்பரம், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 6:54 pm

பிரதியமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான வி.இராதாகிருஷ்ணன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்தனர்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவுத் தலைவரான வேலுசாமி ராதாகிருஷ்ணனுடன், அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணி பொது எதிரணியினரிடம் 11 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன், அவற்றில் மூன்று முக்கிய கோரிக்கைகளை பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க இணக்கம் காணப்பட்டதாக வீ.இராதாகிருஸ்ணன் கூறினார்.

இதேவேளை, மலையக மக்களின் குடியிருப்புப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் மூவரும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 14 பேரும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்