சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 8:31 am

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.

“365 நாட்களிலும் மனித உரிமைகள்” என்பதே இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு செயலாளர் நிமல் புஞ்சி ஹேவா குறிப்பிட்டுள்ளார்.

1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த தினமே வருடந்தோரும் சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு செயலாளர் கூறியுள்ளார்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி நல்லிணக்க வேலைத்திட்டங்களில் பல்வேறு பிரிவினருக்கும் உள்ள பொறுப்புகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்