குருநாகல் பாடசாலையொன்றில் சாதாரண தரப் பரீட்சை 15 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பம்

குருநாகல் பாடசாலையொன்றில் சாதாரண தரப் பரீட்சை 15 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பம்

குருநாகல் பாடசாலையொன்றில் சாதாரண தரப் பரீட்சை 15 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 8:28 am

குருநாகல் கல்வி வலயத்தின் வடமேல் ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையத்தில் நேற்று 15 நிமிடங்கள் தாமதித்தே பரீட்சை ஆரம்பமானதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பரிட்சை நிலைய அதிகாரிகளின் அசமந்தப்போக்கே இதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் லால் குமார குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளருக்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பரீட்சை தாமதித்து ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என பரீ்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.

நடைமுறை பிரச்சனைகளால் சில நிமிடங்கள் தாமதமாவதற்கான வாய்புள்ளதாக தெரிவித்த அவர் அத்தகைய சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு அதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சம்பவங்கள் பரீட்சை நடவடிக்கைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்