ஐ.தே.க வீதி நாடக குழு மீது தாக்குதல்; கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

ஐ.தே.க வீதி நாடக குழு மீது தாக்குதல்; கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

ஐ.தே.க வீதி நாடக குழு மீது தாக்குதல்; கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 5:33 pm

எப்பாவல நகரில் வீதி நாடக குழுவின் மீதும், ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எப்பாவல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர், அவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த, வீதி நாடக குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 05 ஆம் திகதி எப்பாவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைதான சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்