இன்றைய போட்டியிலும் இலங்கை வெற்றிபெறும் – மாவன் அத்தபத்து

இன்றைய போட்டியிலும் இலங்கை வெற்றிபெறும் – மாவன் அத்தபத்து

இன்றைய போட்டியிலும் இலங்கை வெற்றிபெறும் – மாவன் அத்தபத்து

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 10:54 am

இங்கிலாந்து அணியுடனான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றிக்கொண்ட நம்பிக்கையில் இன்றைய போட்டியிலும் தமது அணி வெற்றிப்பெறும் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மாவன் அத்தப்பத்து  தெரிவிக்கின்றார்.

இங்கிலாந்து அணியுடன் இன்று நடைபெறவுள்ள ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[quote]இங்கிலாந்து அணியுடன் கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் அணி வீரர்கள் சிறப்பா செயற்பட்டனர். அந்த நம்பிக்கையுடன் இன்று நாம் களமிறங்குகின்றோம். இலங்கை குழாத்தில் சச்சித்ர சேனாநாயக்க விளையாடவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அவர் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அவர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார்.[/quote]

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்