ஹிருனிகா பிரேமசந்திரவும் மைத்திரிக்கு ஆதரவு

ஹிருனிகா பிரேமசந்திரவும் மைத்திரிக்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 5:42 pm

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது தந்தையை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையே தனது தீர்மானத்திற்கான முக்கிய காரணம் என ஹிருனிக்கா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி ஊழலுக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிரான வெற்றியாகும் என அவர் இதன்போது கூறியுள்ளார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பொது எதிரணயில் இணையுமாறு எவரும் தனக்கு  அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் சுயமாக சிந்தித்தே இந்த முடிவுக்கு வந்ததாகவும்   குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்