யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 7:18 pm

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சட்டவிரோதமாக கேரளா கஞ்சா வைத்திருந்த 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 142 கிலோகிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சந்தேகநபர்கள் கேரளா கஞ்சாவை, நாட்டிற்கு கொண்டுவர பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்