தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் – விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் – விநாயகமூர்த்தி முரளிதரன்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 9:52 pm

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெறுவார் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

[quote]சிங்கள மக்கள் மத்தியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஆள். கொழும்பிலுள்ள பிஸ்னஸ்காரன் தூற்றுவான். அது பரவாயில்லை. ஆனால் கிராமங்களுக்கு போனால் அந்த மக்கள் ஜனாதிபதியை மறக்கமாட்டாங்க. அதனால் அவர் தான் வருவார். அதனால் அதனை பயன்படுத்திகொள்வோம். தமிழ் மக்களின் வாக்கோ முஸ்லிம் மக்களின் வாக்கோ இல்லாமல் அவர் வெல்லுவார். அதற்கு வாக்களிக்கவும் தேவையில்லை. நீங்க எதிர்த்து வாக்களித்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே வெல்லுவார். இப்போ யுத்தம் முடிவடைந்ததும் நீஙகள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றீர்கள்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்