ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழர் சார்பான தீர்வினை முன்வைக்க வேண்டும் – தம்பிராசா

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழர் சார்பான தீர்வினை முன்வைக்க வேண்டும் – தம்பிராசா

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 10:03 pm

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சார்பான தீர்வினை முன்வைக்க வேண்டுமென
அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

[quote]ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எமது மக்கள் ஏற்கனவே ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளனர். தமிழர்களாக பிறந்த அனைத்து தமிழர்களும் கடந்த காலங்களில் ஏற்பட்ட வலியை மறக்கமுடியாதவர்களாக இருக்கின்றார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் தங்களது விஞ்ஞாபனத்தில் எமது தமிழ் மக்கள் சார்பான தீர்வினை அவர்கள் முன்வைக்கவேண்டும். எமக்கு தெரியும் இங்கு இராஜதந்திர நகர்வுகள் உண்டு. ஏன் அந்த தீர்வு பகிரங்கமாக அறிவிக்ககூடாது. 6381 ஏக்கர் காணிகளையும் அந்த மக்களின் இடங்களையும் மஹிந்த ராஜபக்ஸ விடுவிப்பாறென்றால் மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படலாம், யாருமே கேட்காத அநாதைகளாக உறவுகள் சிறையில் வாடுகின்றனர். அரசியல் கைதிகள் 500 பேரையும் நாளை ஜனாதிபதி விடுவிப்பாரென்றால் அந்த 500 கைதிகளின் குடும்பம் 5000 குடும்பங்கள். மாற்றமடையலாம். எந்த சூழ்நிலையும் இறுதி தேர்தல் வரையும் மாற்றமடையலாம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்