சப்ரகமுவ மாகாண சபையின் சபை முதல்வர் ஜயதிஸ்ஸ ரணவீர இராஜினாமா

சப்ரகமுவ மாகாண சபையின் சபை முதல்வர் ஜயதிஸ்ஸ ரணவீர இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 7:38 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்ன தொகுதி முன்னாள் அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் சபை முதல்வருமான ஜயதிஸ்ஸ ரணவீர இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்ன தொகுதி கூட்டத்தின்போது அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

[quote]எமது குடும்பத்தாரே ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள். அதனால் எமது மக்களுடன், மகா சங்கத்தினருடனும் கலந்துரையாடி ஆசிர்வாதத்தை பெற்று, இந்த தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்தவாறே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளேன். சப்ரகமுவ மாகாண சபையில் நான் வகிக்கும் சபை முதல்வர் பதவியிலிருந்து இன்று நான் விலக தீர்மானித்தேன். எனது வாகனங்களையும் நான் ஒப்படைத்தேன். அவற்றை ஒப்படைத்ததன் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில் சப்ரகமுவ மாகாண சபையில் நான் தொடர்ந்தும் செயற்பட்ட எதிர்பார்த்துள்ளேன். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்