ஒரு செயலாளர் போகும் போது மற்றுமொரு செயலாளரை கொண்டு வருவது சிரமமான விடயமல்ல

ஒரு செயலாளர் போகும் போது மற்றுமொரு செயலாளரை கொண்டு வருவது சிரமமான விடயமல்ல

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 9:36 pm

ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தல்கள் செயலகத்திலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியேறும் போது அங்குகூடியிருந்த ஆதரவாளர்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

[quote]எமது கட்சியின் செயலாளர் விலகி, மறுபக்கத்தில் இணைந்துக்கொண்டார். எனினும் தற்போது அந்தப் பக்கத்தில் உள்ள பொதுச் செயலாளர் எம்முடன் இரணைந்துக்கொண்டுள்ளார்.எம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஒரு செயலாளர் போகும் போது மற்றுமொரு செயலாளரை கொண்டு வருவது எமக்கு சிரமமான விடயமல்ல. எமது கதவு தொடர்ந்தும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. எந்த பக்கத்திற்கும் வரலாம் போகலாம். தற்போது அங்கிருந்து இங்கு வர ஆரம்பித்துள்ளனர். ஆகவே எம்முடன் இணைந்துக்கொள்ளுமாறு நாம் உங்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம். எமது கட்சியின் செயலாளரை இழுத்துக்கொண்டனர். மேலும் பலர் வரலாம். நாம் பாரியளவில் வெற்றியீட்டுவோம். நியாயமான முறையில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்