எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய, பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது –  பஸ் சங்கங்கள்

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய, பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது – பஸ் சங்கங்கள்

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய, பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது – பஸ் சங்கங்கள்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 10:37 am

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய, பஸ் கட்டணங்களை குறைக்க முடியாதென பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை எரிபொருள் விலை குறைப்பிற்கேற்ப பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்ஜன பிரியன்ஜித் தெரிவித்தார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், 12 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பஸ் கட்டணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவற்றுள் டீசலின் விலை மாத்திரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவற்றின் விலை நூறு வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணங்களை குறைக்கமுடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை மேலும் 10 ரூபாவால் குறைக்கப்படுமாயின், பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கலந்துரையாட முடியும் எனவும் அன்ஜன பிரியன்ஜித் கூறினார்.

இதேவேளை, கடந்த வருடம் நவம்பர் மாதம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த வருடம் நவம்பர் மாதம் பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க எதிர்பார்த்திருந்ததாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

தற்போது டீசலின் விலை குறைப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நடைமுறையில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அதனால் இறுதி முடிவை எடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பஸ் கட்டணம் தொடர்பான சில முடிவுகளை இன்று பிற்பகல் எடுக்கவுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்