உனைஸ் பாறுக்கின் வீடு, வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்?; பொலிஸார் விளக்கம்

உனைஸ் பாறுக்கின் வீடு, வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்?; பொலிஸார் விளக்கம்

உனைஸ் பாறுக்கின் வீடு, வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்?; பொலிஸார் விளக்கம்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 10:23 pm

பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுகின் வாகனத்திற்கும் அவரின் வீட்டிற்கும் சேதமேட்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீதும் அவரது சாரதி மீதும் தாக்குதல் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பாராளுமன்ற உறுப்பினரின் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட முறுகல் நிலையே தவிர அரசியல் பிரச்சினை அல்ல என பொலிஸ் ஊடகப்பிரிவு நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தது.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியில் உள்ள நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் இந்த சம்பவம் தனக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் எனவும் அதனை பொலிஸார் திசை திருப்புவதற்கு முற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறுக் தெரிவிக்கின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்