ஆயுதங்கள், செல்வாக்கிற்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டமே இந்த தேர்தல் – மைத்திரிபால சிறிசேன

ஆயுதங்கள், செல்வாக்கிற்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டமே இந்த தேர்தல் – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 8:32 pm

அகிம்சாவாத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

[quote]ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக நாம் எமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடுகின்றோம். அரச ஊடகங்கள் தேர்தல் ஒன்றின் போது நடுநிலையாக செயற்பட வேண்டும். அந்த நிலைமையை மீறிய சந்தர்ப்பத்தையும் தேர்தல் சட்டத்தை மீறிய சந்தர்ப்பத்தையும் இன்று நாம் கண்டுகொண்டோம். இந்த சட்டங்களை தேர்தல்கள் செயலகம் முதலில் மீறியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்ததன் பின்னர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஔிபரப்பினை பார்க்கும் பொழுது எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியே வரும் காட்சிகளை காண்பித்தபோதிலும், ஏனைய வேட்பாளர்களுக்கான நியாயம் அரச ஊடகங்களினால் நிலைநாட்டப்படவில்லை. எனவே ஆயுதங்கள் மற்றும் செல்வாக்கிற்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டமே இந்த தேர்தலாகும்.[/quote]

இந்த ஊடக சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டார்.
[quote]எமது பொதுச் செயலாளர் இராஜினாமா கடிதத்தை வழங்கிய போது நான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அது குறித்து நான் கவலையடைகின்றேன். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொதுச் செயலாளர் கபிர் ஹாசிம் நாளை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, விடயங்களை தெளிவுப்படுத்துவார். இந்த நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு, போதைப்பொருள் கலாசாரம், கசினோ சூதாட்டம், மற்றும் குடும்ப நிர்வாகம் இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொதுச் செயலாளரை பயன்படுத்தி, சமநிலைப்படுத்துவதென்றால், இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வளவு இலகுவானது என்பதனை சிந்திக்க வேண்டும்.[/quote]

இதேவேளை, தனது சொத்து விபரம் தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இதன்போது விளக்கமளித்தார்.
[quote]எனது சொத்துக்கள் விபரத்தை இன்று தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைத்தேன். அத்தோடு எனது சொத்து விபரத்தை எவரேனும் காணவிரும்பினால் நாளை முதல் அந்த விபரம் எமது அலுவலகத்தில் இருக்கும். எவரேனும் கோரிக்கை விடுக்கும் பட்சத்திலே, அதனை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. நான் சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது, 2014ஆம் ஆண்டில் எனக்கு அமைச்சிலிருந்து கிடைத்த 30 ஆயிரம் மில்லியன் எரிப்பொருள் கூப்பன்கள் என்னிடம் உள்ளன. எனக்கு தேவையான எரிப்பொருளை பயன்படுத்தியதன் பின்னர், எஞ்சிய கூப்பன்களே இவை. நான் சுகாதார அமைச்சின் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவரை அழைத்துள்ளேன். இவற்றை பொறுப்பேற்குமாறு கூறியுள்ளேன். [/quote]

சந்திரானி பண்டார
[quote]இன்று என்னை பற்றிய பல்வேறு கட்டுக்கதைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்ற நிலையில், குறிப்பாக எனது மக்களுக்காக இந்த அறிவித்தலை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன். நான் அரசியலில் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியில் நீடிப்பேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்