அரசாங்கத்துடன் இணைந்தார் திஸ்ஸ; அலரி மாளிகைக்கும் விஜயம் (Video)

அரசாங்கத்துடன் இணைந்தார் திஸ்ஸ; அலரி மாளிகைக்கும் விஜயம் (Video)

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2014 | 4:39 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் கூட்டமொன்றில் உரையாற்றியபோது, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்த திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக அலரி மாளிகைக்கு சென்றிருந்தார்

அத்தோடு ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்காக  திஸ்ஸ அத்தாநயக்கவுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்