மாலைத்தீவிற்கு ஒரு இலட்சம் குடிநீர் போத்தல்களை வழங்கும் இலங்கை

மாலைத்தீவிற்கு ஒரு இலட்சம் குடிநீர் போத்தல்களை வழங்கும் இலங்கை

மாலைத்தீவிற்கு ஒரு இலட்சம் குடிநீர் போத்தல்களை வழங்கும் இலங்கை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 11:57 am

மாலைத்தீவிற்கு உதவும் முகமாக ஒரு இலட்சம் குடிநீர் போத்தல்களை வழங்கு இலங்கை தீ்ர்மானித்துள்ளது.

மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலைத்தீவு நீர் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்நாட்டின் தலைநகரில் இலட்சக்கணக்கான மக்களுக்கு நீர் விநியோகம் ஸ்தம்பிதமடைந்தது.

இதன்காரணமாக அயல்நாடுகளான இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மாலைத்தீவு அதிகாரிகளால் உதவிகள் கோரப்பட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கமைய, பாரிய ஐந்து விமானங்களின் மூலம் மாலைத்தீவிற்கு நீரை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்