மட்டக்குளியில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை

மட்டக்குளியில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை

மட்டக்குளியில் மீன் வியாபாரி வெட்டிக் கொலை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 11:42 am

கொழும்பு மட்டக்குளி பாம் ரோட் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் தேசிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மீன் வியாபாரி ஒருவரே நேற்றிரவு எட்டு மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்