பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வெளிநாட்டு யுவதி விளக்கமறியலில்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வெளிநாட்டு யுவதி விளக்கமறியலில்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வெளிநாட்டு யுவதி விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 4:46 pm

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு யுவதியொருவர் உட்பட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண், ஒருவரிடம் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்திருந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இதற்கமைய, அவர்கள் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிணைக்கான தொகையை செலுத்த முடியாது போனதால், டிசம்பர் 08 ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்