புகலிடம் கோரி பேர்த்தில் தங்கியுள்ள இலங்கை குடும்பத்தை நௌரு தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

புகலிடம் கோரி பேர்த்தில் தங்கியுள்ள இலங்கை குடும்பத்தை நௌரு தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

புகலிடம் கோரி பேர்த்தில் தங்கியுள்ள இலங்கை குடும்பத்தை நௌரு தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 9:39 am

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 25 குடும்பங்கள் விமானம் மூலம் இன்று நௌரு தீவுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இவர்களில் பேர்த் தடுப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கை குடும்பமொன்றும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

08 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்றிருந்த இந்தக் குடும்பத்தினர், நௌரு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போதிலும், அண்மையில் பிரசவத்திற்காக பேர்த்துக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

ஆயினும், தற்போது நௌரு தீவுகளுக்கு மீள அனுப்பப்படவுள்ள செய்தியை கேட்டு, அவர்கள் அதிர்ச்சியுற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களை நௌரு தீவுகளுக்கு அனுப்பும் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்