டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோலின் விலைகள் குறைப்பு

டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோலின் விலைகள் குறைப்பு

டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோலின் விலைகள் குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 9:12 am

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு லீற்றர் பெற்றோல் மற்றும் டீசலின் விலை 7 ரூபாவினாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 5 ரூபாவாலும் விலைக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 150 ரூபாவிற்கும் லங்கா ஒடோ டீசல் 111 ரூபாவிற்கும், லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் 133 ரூபாவிற்கும் விநியோகிக்கப்படும் என சுசந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருட்கள் விலைக் குறைப்புக்கு அமைய மண்ணெண்ணெய் 61 ரூபாவிற்கும் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்