கச்சத்தீவை மீட்கக் கோரும் முன்மொழிவுகள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்கக் கோரும் முன்மொழிவுகள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்கக் கோரும் முன்மொழிவுகள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 2:08 pm

பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெறும் வகையில் கச்சத்தீவை மீட்பதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் நேற்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களது 79 படகுகளையும் மீட்பதற்கும் மத்திய அரசு விரைந்து செயற்பட வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தமது முன்மொழிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்வதாகவும் தமிழக முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்