இருபதுக்கு-20 தொடரை சமநிலையில் நிறைவு செய்தது நியூசிலாந்து

இருபதுக்கு-20 தொடரை சமநிலையில் நிறைவு செய்தது நியூசிலாந்து

இருபதுக்கு-20 தொடரை சமநிலையில் நிறைவு செய்தது நியூசிலாந்து

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 12:16 pm

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேச கிரிக்கட் தொடரை 1-1 என்ற கணக்கில் நியூசிலாந்து சமநிலையில் நிறைவு செய்துள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது  இருபதுக்கு-20 போட்டியை நியூசிலாந்து 17 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

போட்டியின் முதலில் துடுப்படுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

145 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஒட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

2 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியை பாகிஸ்தான் அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்