இரத்தினபுரியில் பஸ் மோதியதில் ஒருவர் பலி

இரத்தினபுரியில் பஸ் மோதியதில் ஒருவர் பலி

இரத்தினபுரியில் பஸ் மோதியதில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2014 | 4:51 pm

இரத்தினபுரி கொடகவெல பலவின்ன பகுதியில் பஸ்சொன்று மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை பெல்மடுல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொடகவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்