190 ஓவர்களில் ஒரு பௌன்சர் பந்துகூட இல்லை; நியூஸிலாந்து அணியின் மனித நேயம்

190 ஓவர்களில் ஒரு பௌன்சர் பந்துகூட இல்லை; நியூஸிலாந்து அணியின் மனித நேயம்

190 ஓவர்களில் ஒரு பௌன்சர் பந்துகூட இல்லை; நியூஸிலாந்து அணியின் மனித நேயம்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2014 | 4:58 pm

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுக்ஸ் பௌன்சர் பந்து வீச்சில் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பௌன்சர் பந்தினைக் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடைபெற்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் பிலிப் ஹியுக்ஸ் உயிரிழந்தார்.

இதையடுத்து நியூசிலாந்து பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் பாகிஸ்தானின் இனிங்ஸில் பௌன்சர் பந்துகளே வீசாமல் ஹியுக்ஸுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 1135 பந்துகளில் (190 ஓவர்கள்) ஒன்று கூட பெளன்சர் பந்தாக காணப்படவில்லை.

இரண்டாவது இனிங்ஸிலும் வீரர்கள் சதம் அடிக்கும்போது மட்டையை தூக்கி கொண்டாட்டத்தை காண்பிக்கக்கூடாது என்றும் முடிவு செய்தனர்.

மெக்கல்லம் தனது இரட்டை சதத்தை ஹியுக்ஸுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

குறிப்பாக வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற சூழ்நிலையிலும் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பௌன்சர் பந்துகளை வீசவில்லை.

இரு இனிங்ஸ்களிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் ஒரு விக்கெட் வீழ்ச்சிக்கு கூட கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை நியூசிலாந்து வீரர்கள்.

நியூஸிலாந்து அணி வீரர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்