தமிழக மீனவர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்ககோரி மாநிலங்கள் அவையில் வலியுறுத்தல்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்ககோரி மாநிலங்கள் அவையில் வலியுறுத்தல்

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்ககோரி மாநிலங்கள் அவையில் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2014 | 6:07 pm

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் இன்றைய அமர்வில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் கூட்டாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், தமிழக மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தொழிலில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, கச்சதீவை மீட்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக பாஜகவின் உறுப்பினர்கள் சிலர் வெளியிடும் பொறுப்பற்ற கருத்துக்கள் தொடர்பில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமென திமுக உறுப்பினர் திருச்சி சிவா அமர்வில் சுட்டிக்காட்டினார்.

தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் மத்திய அரசு முயற்சிகள் முன்னெடுக்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் முத்து கருப்பன் கோரியிருந்ததாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்