ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2014 | 3:37 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சார்பில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் 14 கட்சிகள் தற்போது இணைந்துள்ளதாக இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

கட்டுப்பணம் செலுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அனுர பிரியதர்ஷன யாப்பா, பெசில் ராஜபக்ஸ, ஏ.எச்.எம்.பௌசி ஆகிய அமைச்சர்கள் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்