எனது ஆவணங்கள் இருக்குமாயின் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியிடவும்; நவீன் சவால்

எனது ஆவணங்கள் இருக்குமாயின் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியிடவும்; நவீன் சவால்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2014 | 9:20 pm

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த, நவீன் திசாநாயக்க, சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று நண்பகல் சென்றிருந்தார்.

சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு வருகைத் தந்த நவீன் திசாநாயக்கவிற்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க சவாலொன்றையும் இதன்போது விடுத்தார்.

[quote]எனது சகோதர ஊடகவியலாளர்களே, எனது ஆவணங்கள் இருக்கின்றதோ தெரியவில்லை. ஜனாதிபதிக்கு ஒரு விடயத்தை தெளிவாக கூறிக் கொள்கின்றேன். எனது ஆவணங்கள் இருக்குமாயின், அதனை வைத்துக் கொள்ள வேண்டாம். 24 மணித்தியாலங்களுக்குள் அதனை வெளியிடுமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்