ஸ்போட்ஸ் பெஸ்ட் – மொபிடெல் பிளட்டினம் விருது; மெத்யூஸிற்கு இரு விருதுகள் (பட்டியல் இணைப்பு)

ஸ்போட்ஸ் பெஸ்ட் – மொபிடெல் பிளட்டினம் விருது; மெத்யூஸிற்கு இரு விருதுகள் (பட்டியல் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 10:46 pm

ஸ்போட்ஸ் பெஸ்ட் மற்றும் மொபிடல் ஆகியன இணைந்து நடத்தும் பிளட்டினம் விருது வழங்கும் விழா இன்று இடம்பெறறது.

இந்த விருது வழங்கல் விழாவில் பிரபல்யமான விளையாட்டு வீரருக்கான ஸ்போட்ஸ் பெஸ்ட் மொபிடல் பிளட்டினம் விருதினை அஞ்சலோ மெத்யூஸ் வெற்றி கொண்டார்.

இலங்கையின் விளையாட்டு துறையின் எதிர்காலத்திற்காய் நியூஸ்பெஸ்ட், MTV/MBC ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த ஸ்போட்ஸ் பெஸ்ட் – மொபிடெல் பிளட்டினம் விருது விழா ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்றது.

நாட்டின் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அத்தியாயமான இந்த விருது வழங்கலில் விழாவிற்கு வருகைத் தந்த பிரதம விருந்தினர்களுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

பிளட்டினம் விருதினை வௌ்ளைக் குதிரையொன்றின் மீது வைத்து ஸ்டைன் கலையகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியுக்ஸிற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதேபோன்று விருது பெறுவோரை தெரிவு செய்த யூரி சபையினர் கொளரவிக்கப்பட்டனர்.

பாடசாலை, விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தேசிய அணியினை பிரநிதிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுத்துறையின் புகழ்பெற்ற சுயாதீன ஜூரிகள் குழுவினாலேயே விருதுக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ப்ளெட்டினம் விருது வழங்கும் விழாவில் ஜனரஞ்சக வீரரை குறுந்தகவல் மூலம் தெரிவுசெய்யும் வாய்ப்பு நேயர்களுக்கு கிட்டியமை விசேட அம்சமாகும்.

 

விருது பட்டியல்:-
01. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை – சாமரி அதபத்து
02. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் – இந்திக திஸாநாயக்க
03. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை – சந்திரிகா சுபாஷினி
04. ஆண்டின் சிறந்த பாடசாலை விளையாட்டு வீரர் – ஷசிக ஏகநாயக்க
05. வாழ்நாள் சாதனையாளர் விருது – அர்ஜுன ரணதுங்க
06. ஆண்டின் சிறந்த பாடசாலை விளையாட்டு வீராங்கனை – மெச்சிகோ ரஹீம்
07. ஆண்டின் சிறந்த அணி – கடற்படை ரக்பி அணி
08. ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் – ஶ்ரீமால் அபோன்சு
09. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் (வலதுகுறைந்தோர்) – பிரதீப் சஞ்சய
10. ஆண்டின் சிறந்த மோட்டார் வாகன விளையாட்டு வீரர்/வீராங்கனை திலந்த மாலகமுவ
11. ஆண்டின் மீள்வருகை விளையாட்டு வீரர் – அநுருத்த ரத்நாயக்க
12. ஆண்டின் சிறந்த இராணுவ விளையாட்டு வீரர் – யோஷித ராஜபக்ஸ
13. ஆண்டின் சிறந்த உடற்கல்வி ஆசிரியர்/ஆசிரியை – ஏ.டி.நந்தாவதி
14. ஆண்டின் சிறந்த பல்கலைக்கழக விளையாட்டு வீரர்/வீராங்கனை – நிசன்சலா வீரசிங்க
15. ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த விளையாட்டு வீரர் – அகில ரவிசன்க
16. ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த விளையாட்டு வீராங்கனை – கிமிகோ ரஹீம்
17. ஆண்டின் சிறந்த பாடசாலை அணி – இசிபத்தான கல்லூரியின் ரக்பி அணி
18. ஆண்டின் சிறந்த வெளிமாவட்ட பாடசாலை விளையாட்டு வீரர் – ஹிமாசா ஏசான்
19. ஆண்டின் சிறந்த பாடசாலை ரக்பி வீரர் – ஒமல்க குணவர்தன
20. ஆண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் – தரிந்த மென்டிஸ்
21. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் – அஞ்சலோ மெத்யூஸ்
22. ஸ்போட்ஸ் பெஸ்ட் மொபிடல் பிளட்டினம் விருது – அஞ்சலோ மெத்யூஸ்

a1 a2 a3 a4 a5 a6 a7 new

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்