ஸ்போட்ஸ் பெஸ்ட் – மொபிடெல் பிளட்டினம் விருது வழங்கும் விழா ஆரம்பம்

ஸ்போட்ஸ் பெஸ்ட் – மொபிடெல் பிளட்டினம் விருது வழங்கும் விழா ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 7:45 pm

இலங்கையின் விளையாட்டு துறையின் எதிர்காலத்திற்காய் நியூஸ்பெஸ்ட், MTV/MBC ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஸ்போட்ஸ் பெஸ்ட் – மொபிடெல் பிளட்டினம் விருது விழா தற்போது ஸ்டைன் கலையகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பாடசாலை, விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தேசிய அணியினை பிரநிதிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு இன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விளையாட்டுத்துறையின் புகழ்பெற்ற சுயாதீன ஜூரிகள் குழுவினாலேயே விருதுக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ப்ளெட்டினம் விருது வழங்கும் விழாவில் ஜனரஞ்சக வீரரை குறுந்தகவல் மூலம் தெரிவுசெய்யும் வாய்ப்பு நேயர்களுக்கு கிட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.

இன்று நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பிரபல வீரராக விருதினை பெறும் வீரர் யார் என்பதை தெரவித்து குறுந்தகவல் அனுப்பும் மூவருக்கு தலா ஒரு இலட்ச ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

பிரபல பாடகர்கள் பாடகிகள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்றும் விசேட கலை நிகழ்வுகள் பலவும் ‘ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் மொபிடல் பிளெட்டினம் விருது’ வழங்கும் நிகழ்வை அலங்கரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்