மைத்திரிபால சிறிசேன கன்னி பிரசார கூட்டத்தை ஆரம்பித்தார் (Video & Photos)

மைத்திரிபால சிறிசேன கன்னி பிரசார கூட்டத்தை ஆரம்பித்தார் (Video & Photos)

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 4:51 pm

ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கன்னி பிரசாரக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று நடைபெறுகின்றது

”மைத்திரி நிர்வாகத்துடன் இணைவோம்” எனும் தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.

பொலன்னறுவை கதுருவெல நகரத்திற்கு அருகே நடைபெறுகின்ற இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

எதிரணியில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போதைய ஆட்சி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி வழிவகுக்கும் என இந்த கூட்டத்தில் உரையாற்றிய பலரும் சுட்டிக்காட்டியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றுகையில் தற்போதைய அரசாங்கத்திற்கு அல்லது தனி நபர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் தாம் இந்த செயற்பாட்டுடன் இணையவில்லை என வலியுறுத்தியுள்ளார்.

விவசாயம், நீர் முகாமைத்துவம், விவசாய ஓய்வூதியம் ஆகிய விடயங்கள் சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை தமது ஆட்சியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அபிவிருத்திப் பணிகளை மும்மடங்காக அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

10391463_810166802376913_8370061064829728336_n 10801656_810166852376908_8721885484870653267_n MY3 rally

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்