மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்பட வேண்டும் – சஜித்

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்பட வேண்டும் – சஜித்

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்பட வேண்டும் – சஜித்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 2:10 pm

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் செயற்படவேண்டும் என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுராதபுர மாவட்ட சம்மேளன கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ குகனேஸ்வரன் இந்த சம்மேளனத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

[quote]எமது யுகம் ஒன்றை ஆரம்பிப்போம். பொதுமக்களுக்கு வரப்பிரசாதங்கள் மற்றும் பலன்களை தரக்கூடிய யுகம் ஒன்றை உருவாக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து ஆதரவாளர்களும் ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவருடன் கைகோர்த்து இந்த பயணத்தில் இணைந்து கொள்வோம். அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பின்னர் கிராமங்கள் மற்றும் வீதிகளில் இறங்கி செயற்படக்கூடிய மக்களை வாழவைக்க எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம். இதற்காக நாம் பங்களிப்பு செய்வோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்