பிரபலங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மோடி

பிரபலங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மோடி

பிரபலங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மோடி

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 6:30 pm

டைம்ஸ் சஞ்சிகையின் வருடத்திற்கான பிரபலங்கள் பட்டியலில் பாரத பிரதமரை பின்தள்ளி, பேர்கசன் ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் பொலிஸ் உத்தியோகத்தரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேர்கசன் பகுதியில் அதிகளவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமையவே, பேர்கசன் ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

வாசகர்களின் தெரிவுகளுக்கு அமைய, இந்த மாத முற்பகுதியில் முதலிடத்தில் இருந்த நரேந்திர மோடி தற்போது இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவாளர் ஜோய்வா வொங் மூன்றாம் இடத்திலும், நோபெல் பரிசு வென்ற மலாலா யூசுப் சாய் நான்காம் இடத்திலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்