தம்புளையில் கண்ணீர் வடித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (Video)

தம்புளையில் கண்ணீர் வடித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (Video)

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 3:56 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது சீர்குலைந்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் கண்ணீர் மல்க இன்று தெரிவித்துள்ளார்.

கலேவெலயில் இன்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புளை தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[quote]போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான கடத்தல்காரர்கள்  எமது அரசாங்கத்திற்குள் உள்ளதாக நான் கூறினேன். அது உண்மை தான் தற்போதும் கூறுவேன். எனக்கு எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. உள்ளத்தில் கவலை இல்லையா? ஜனாதிபதியிடம் நான்கு ஐந்து தடவைகள் இது குறித்து கூறினேன். இவ்வாறு மன உளைச்சலுக்குள்ளானவர்கள் பலர் உள்ளனர். ஆகவே இது குறித்து கவனத்திற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் நான் கூறினேன். நாமல் ராஜபக்ஸ தம்புள்ளைக்கு வந்திருந்தபோது எனது வீட்டில் வைத்து இது குறித்து கவனம் செலுத்துமாறு கூறினேன். இல்லை அவ்வாறு இல்லை என கூறினார். ஆனால் அவர்கள் நான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதனை மறந்துவிட்டார்கள். எனக்கு இதன் மறுபக்கம் தெரிகின்றது. தற்போது ஒரு போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. எனது தந்தை கவிதைகளை விற்று அரசியலில் ஈடுபட்ட ஒரு அப்பாவி மனிதர். எனது தந்தை எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டபோதிலும் கட்சியை விட்டு செல்லவில்லை. அவர் எனக்கு கொடுத்த ஒரே ஒரு சொத்து இந்த கட்சி தான். நான் கட்சியை விட்டு ஒரு போதும் போகமாட்டேன் என ஜனாதிபதியிடம் கூறினேன். ஆனால் நான்  உண்மையைக் கூற வேண்டும். அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் தவறுகளை சரி செய்யும் நோக்கத்துடனேயே அடுத்த தேர்தலுக்கு வருவோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்