சீரற்ற வானிலையால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு; மண்சரிவு அபாயம் தொடர்வதாகவும் எச்சரிக்கை

சீரற்ற வானிலையால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு; மண்சரிவு அபாயம் தொடர்வதாகவும் எச்சரிக்கை

சீரற்ற வானிலையால் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு; மண்சரிவு அபாயம் தொடர்வதாகவும் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 4:17 pm

சீரற்ற வானிலைக் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.

மேலும் சீரற்ற வானிலை நிலவுகின்ற நிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மலையக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி புதுமலை தோட்டத்திலுள்ள 30 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் பணிப்புரைக்கு அமைய இவர்கள் ஸ்பிரிங்வெளி கோட்டகொட தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹாலிஎல பிரதேச செயலாளர் டபிள்யூ.எம்.ஆர்.ரஞ்சித் தெரிவிக்கின்றார்.

தொழிற்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஸ்பிரிங்வெளி புதுமலை தோட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதால் தோட்ட நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் அங்குள்ள மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக ஹாலி – எல பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

யாழ் குடாநாட்டில் பெயும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் சில குளங்கள் பெருக்கெடுத்துள்ளன.

இதனால் மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலகப் பிரிவின் வெல்லாவெளி மண்டூர் பகுதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இறால்குழி கங்கைக் கரையோரத்தை அண்மித்து வாழும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடலரிப்பு காரணமாக அச்சத்துடன் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையை அடுத்து கடலரிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என இப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் பெய்யும் தொடர்மழையினால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை அதிக மழைக் காரணமாக நீர்பாசன திணைக்களத்திற்குட்பட்ட 20 நீர்த்தேக்கங்களில் வான்கதவுகளை திறக்கும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேங்கங்களில் 60 வீதம் வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஹதென்ன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்