கத்தி வெற்றி விழாவில் அரசியல் எதிர்காலம் குறித்து விஜய் பேச்சு?

கத்தி வெற்றி விழாவில் அரசியல் எதிர்காலம் குறித்து விஜய் பேச்சு?

கத்தி வெற்றி விழாவில் அரசியல் எதிர்காலம் குறித்து விஜய் பேச்சு?

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 5:36 pm

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று கத்தி.

இந்த படத்தின் வெற்றி விழா பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகிறது, அதோடு கத்தி படத்தின் 52 ஆவது நாள் விழாவை திருநெல்வேலியில் விஜய் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த விழாவில் விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனராம். திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இந்த விழாவில் திரளாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் தன்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றியும், அரசியல் குறித்தும் விஜய் பேசுவார் என விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்