கஞ்சாவை வைத்திருந்த பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

கஞ்சாவை வைத்திருந்த பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

கஞ்சாவை வைத்திருந்த பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 6:20 pm

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான நீதிமன்ற பதிவாளர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் பண்டாவரளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

8 கிலோகிராம் கஞ்சாவை முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றபோது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பண்டாரவளை வெலிமடை வீதியில் கஹத்தேவெல பகுதியில் பொலிஸார் குறித்த முச்சக்கரவண்டியை கைப்பற்றியிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்