அரசியலுக்கு வராது மக்களுக்கு சேவையாற்ற முடியும் – ரஜினிகாந்த்

அரசியலுக்கு வராது மக்களுக்கு சேவையாற்ற முடியும் – ரஜினிகாந்த்

அரசியலுக்கு வராது மக்களுக்கு சேவையாற்ற முடியும் – ரஜினிகாந்த்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 7:51 pm

அரசியலுக்கு வராது, மக்களுக்கு சேவையாற்ற முடியுமென தமிழ் சினிமாவின் சுப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவிற்கும், மக்களுக்கும் மறைந்த நடிகர் ராஜ்குமார் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில், பெங்களூரில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வொன்றில் ரஜினிகாந் இதனைக் கூறியுள்ளார்.

ராஜ்குமார் பழகுவதற்கு சிறந்த ஒருவர் எனவும், சினிமாத் துறைக்காகவும், மக்களுக்காகவும் பல்வேறு விடயங்களை அவர் செய்துள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடிகர் ராஜ்குமாரிடம் மாத்திரமே தாம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும், அரசியல் ஆசை இல்லாது மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதனை அவர் நிரூபித்து காட்டியுள்ளதாகவும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்