அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் நவீன் திசாநாயக்க (கடித விபரங்கள் இணைப்பு)

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் நவீன் திசாநாயக்க (கடித விபரங்கள் இணைப்பு)

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் நவீன் திசாநாயக்க (கடித விபரங்கள் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2014 | 1:44 pm

அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களாவன

அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு  அமைச்சர் மற்றும் நுவரெலியா தொகுதியின் இணைப்பாளர் சபையின் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தும் நான் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளளேன்.

இந்த இராஜினாமா மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.  

நுவரெலியா மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற விதத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமிய மக்கள் எதிர்பார்க்கின்ற பொறுப்புகள் மற்றும் நோக்கங்களை என்னால் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக கடந்த 04 வருட காலப்பகுதிக்குள் ஏனைய தலைவர்களுக்கு போதுமான அளவு வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிய போதிலும், கிராமிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்மை போன்ற அரசியல்வாதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்காமை, மிகக் குறைந்த வளங்களை பெற்றுக் கொடுத்தமையும் நான் இராஜினாமா செய்ய  காரணமாக அமைந்துள்ளது.

இந்த விடயம் குறித்து நான் உரிய அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்த போதிலும், அதற்கு அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த பதில் கவலையளிக்கும் விதத்தில் அமைந்தது.

எனது தந்தையான மறைந்த காமினி திஸாநாயக்க மற்றும் லலித் எத்துலத்முதலி ஆகியோர் 1990ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மற்றும் அதனை மாற்றியமைப்பதற்கும் பாரிய கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் 1994 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது தந்தை குறிப்பிட்டிருந்தார்.

அதே விடயத்தை உங்களின் மஹிந்த சிந்தனை மற்றும் மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு ஆகியவற்றிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனது தந்தை, மறைந்து 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட விடயத்தை முன்னெடுக்குமாறு இந்த சமூகத்திலுள்ள அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதனால் நானும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் சக்திகளுடன் இணைகின்றேன்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், அனல் மின்நிலையத்தில் இடம்பெற்ற 150 கோடி ரூபா கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இது வெளியாகியுள்ள ஒரே ஒரு விடயம் மாத்திரமே.

சீனாவிலிருந்து கிடைக்கின்ற திட்டங்களின் ஊடாக பாரிய மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் நன்றாக அறிவேன். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்தத்தை நிறைவு செய்வதற்காகவே, 2007ஆம் ஆண்டு உங்களுடன் இணைந்துக் கொண்டேன். யுத்தத்தை நிறைவு செய்தமைக்கான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்ற வகையில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இருவரது அரசியல் பயணம் வேறுப்பட்டிருக்கின்ற போதிலும், தனிப்பட்ட ரீதியில் எம்மிடையே எவ்வித பேதங்களும் கிடையாது.

இது முழுமையாகவே கொள்கை ரீதியான தீர்மானம் மட்டுமே!

அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு பதவியை வகித்த காலப் பகுதியில் உங்களால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன்.

naveen2 naveen_1


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்