வாழைச்சேனை பகுதியில் இருவர் கைது

வாழைச்சேனை பகுதியில் இருவர் கைது

வாழைச்சேனை பகுதியில் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 2:06 pm

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை இராணுவ முகாமின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் கையடக்க தொலைப்பேசியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 20, 34 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ  விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சந்தேகநத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்