மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 11:19 am

மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மேய்ச்சலுக்காக தனது கால்நடைகளை கரடியனாறு பகுதிக்கு ஓட்டிச்சென்ற ஒருவரே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

காட்டு யானையின் தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்