தேசிய அருங்காட்சியகத்தில் நுழைந்தமை தொடர்பில் சந்தேகநபர்கள்  அடையாளம் காணப்படவில்லை

தேசிய அருங்காட்சியகத்தில் நுழைந்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை

தேசிய அருங்காட்சியகத்தில் நுழைந்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 7:56 am

தேசிய அருங்காட்சியகத்தினுள் திருடர்கள் நுழைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அருங்காட்சியகத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 74 பேரின் விரல் அடையாளங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் அருங்காட்சியகத்தினுள் நான்கு கைவிரல் அடையாளங்களும், மற்றுமொரு தடயமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள விரல் அடையாளங்களுடன் இந்த விரல் அடையாளங்கள் பொருந்தாவிடின், அருங்காட்சியகத்தின் ஏனைய தரப்பினரின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள நேரிடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், கறுவாத்தோட்ட பொலிஸாரும் கூட்டாக இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்