கொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் பேரே வாவியிலிருந்து சடலம் மீட்பு(Video)

கொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் பேரே வாவியிலிருந்து சடலம் மீட்பு(Video)

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 3:42 pm

கொழும்பு பெஸ்தியான் மாவத்தையில் அமைந்துள்ள மிதக்கும் வர்த்தக தொகுதிக்கு அருகிலுள்ள பேரே வாவியிலிருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்