கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – தேசிய கட்டட ஆய்வு நிலையம்

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – தேசிய கட்டட ஆய்வு நிலையம்

கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – தேசிய கட்டட ஆய்வு நிலையம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 8:12 am

நிலவுகின்ற அதிக மழையுடனான வானிலையினால் கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தினால், நேற்றிரவு 8.30 முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அபாய நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரனியகல, கலிகமுவ, கேகாலை, மாவனெல்லை, ரம்புக்கனை, ருவன்வெல்ல, வரக்காபொல மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிருவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி – கொழும்பு வீதியின் கேகாலை, மீபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவு காரணமாக வாகனப் போக்குவரத்திற்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

மீபிட்டிய சந்தியிலிருந்து முன்னோக்கிச் செல்லும் கேகாலைக்கான புதிய மாற்றுப் பாதையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், கண்டி – கொழும்பு பிரதான பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்