அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2014 | 11:11 am

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவை அண்மித்த கடற்பரப்பில் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்திருந்ததாகவும், அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேரையும் கடற்படையினர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

நவம்பர் மாதம் முதலாம் திகதி இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

புகலிடக் கோரிக்கையாளர்களில் ஆறு பிள்ளைகளும் அடங்குயுள்ளனர்.

யாழ்ப்பாணம், சிலாபம், கொழும்பு மற்றும் மாரவில பகுதிகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்