”வெலே சுதா”வுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் கைது

”வெலே சுதா”வுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் கைது

”வெலே சுதா”வுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 8:06 pm

அக்கரபத்தனை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் ஹெரோய்ன போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலுள்ள வெலே சுதா என்பவருடன் சந்தேகநபர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வெலே சுதாவினால் அனுப்பப்பட்ட 25 கிலோகிராம் போதைப்பொருள் சந்தேகநபர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், அவற்றின் மொத்தப் பெறுமதி 15 கோடி ரூபா எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதான சந்தேகநபர்கள் இருவரையும் மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்