வரவு-செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு-செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு-செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 7:47 pm

2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு ஆகியன வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

அரசாங்கத்தில் இருந்து அண்மையில் விலகிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிறிசேன, ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டீ.எஸ் குணவர்த்தன, வசந்த சேனாநாயக்க, ரஜீவ விஜேசிங்க, துமிந்த திஸாநாயக்க மற்றும் ஜாதிக்க ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் சபைக்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல, கரு ஜயசூரிய ஆகியோரும், ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் டிரான் அலஸும் வாக்கெடுப்பிற்கு சமூகமளித்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்