யாழ்ப்பாணத்தில் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே மோதல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே மோதல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே மோதல்; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 8:02 pm

கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, யாழ். நாவாந்துறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் நேற்று மாலை இடம்பெற்ற கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் பின்னர், இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, மோதல் வலுப்பெற்று, நாவாந்துறை பகுதியில் வீடுகள் மீது கற்கள், கண்ணாடிப் போத்தல்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததது.

இதன்போது, வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்தவர்களின் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கேரதீவு – சங்குப்பிட்டி அருகில் கடற்றொழிலுக்குச் சென்ற சிலர் மீது இன்று காலை அடையாளம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து மோதல் மீண்டும் வலுப்பெற்றுள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு கடமைகளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்