சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டமை ”முட்டாளின் வேலை” – வாசுதேவ

சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டமை ”முட்டாளின் வேலை” – வாசுதேவ

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2014 | 9:20 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பெரும்பான்மையானோருக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கான தேவை இருப்பதாக அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவிக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

[quote]இது தீயது, ஊழல் மிக்கது என்று கூறுகின்ற விடயத்தை சிறந்த பக்கத்திற்கு எடுத்துகொண்ட ஜனபதிபதி ஒருவர் இருப்பதாக இருந்தால் அது மஹிந்த ராஜபக்ஸ மாத்திரமே. இந்த விடயத்தை மாற்றுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலானவர்களுக்கு மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. எமது சுயாதீனத்தையும் அபிமானத்தையும் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வது எவ்வாறு என்ற பிரச்சினை தான் தற்போது காணப்படுகின்றது.[/quote]

இதன்போது, தேசிய மொழிகள் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கருத்து வெளியிட்டார்.

சிரச தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தடைசெய்யப்பட்ட விடயம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

கேள்வி
அரசாங்கத்திற்குள் முட்டாள்கள் இருக்கின்றார்களா? ஏனென்றால் நேற்று முன்தினம் சிரசவில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்சியை முழு நாடும் பார்த்துக்கொண்டிருந்தது. இதனை பியோ ரி.வி போன்றவற்றில் நிறுத்தினார்கள். அரசாங்கததின் உத்தரவின்றி இதனை நிறுத்த முடியாது.

வாசுதேவ நாணயக்கார:-
அது முட்டாளின் வேலை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்